Friday, September 23, 2016


புதிய உலகம்

 

காணகவெளியை சிதைத்து

நான் நிர்மாணித்த நகரத்தில்

ஒரு பெருமரத்தின் நிழலில்

அடங்கிய இருட்டு

 

எரியும் காட்டில் தப்பிய

கடைசி பனித்துளி

கடைசி சூரியனின்

கடைசி வெப்பம்

 

புதிய உலகம் பிறப்பதற்கான

வெப்பத்தை வேர்களில்

ஒளித்து வைத்திருக்கிறேன்

 

பேரண்டத்தின் கரங்கள்

நிர்வாணத்தின் மேல்

போர்த்திய பனித்துளிகளை

மெல்ல விலக்குகிறது

 

நாய்களின் இந்திரியச்சூட்டில்

படுத்துறங்கும் சூரியன்

கைகளை நீட்டியபடி வெளிவருகின்றது